ADDED : டிச 05, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி, அடுத்த ஆண்டில் 29,000 புள்ளிகளை எட்டும் என எதிர்பார்ப்பதாக, சர்வதேச பங்குத்தரகு நிறுவனமான, 'பி.ஓ.எப்.ஏ., செக்யூரிட்டிஸ்' தெரிவித்துள்ளது.
சராசரியாக, முதலீட்டாளர்களுக்கு அது 11.50 சதவீத லாபத்தை தரும் என்றும்; ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளைவிட, பெருநிறுவன பங்குகளான லார்ஜ்கேப், அதிக லாபத்தை தரக்கூடும் என்றும் கூறியுள்ளது.
ஐ.டி., கெமிக்கல்ஸ், ஜூவல்லரி, கன்ஸ்யூமர் டியுரபிள், ஹோட்டல் பிரிவுகளில் தற்போது சிறு, நடுத்தர நிறுவன பங்குகள் கூடுதல் லாபம் பெற்று தருவதாகவும், பி.ஓ.எப்., செக்யூரிட்டிஸ் கூறியுள்ளது.

