நிப்டி 25,500க்கு மேல் இருக்கும் வரை ஏற்றம் தொடரும்
நிப்டி 25,500க்கு மேல் இருக்கும் வரை ஏற்றம் தொடரும்
UPDATED : பிப் 10, 2026 06:20 AM
ADDED : பிப் 10, 2026 06:19 AM

நிப்டி
நாள் முழுவதுமே ஏற்றத்தில் வர்த்தகமான நிப்டி, நாளின் இறுதியில் 173 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஸ்மால்கேப்100 குறியீடு அதிகபட்சமாக 2.64 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி100 குறியீடு குறைந்தபட்சமாக 0.72 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில் நிப்டி மீடியா குறியீடு அதிகபட்சமாக 4.37 சதவீத ஏற்றத்துடனும் நிப்டி ஐ.டி., குறியீடு குறைந்தபட்சமாக 0.02 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,305 பங்குகளில் 2,484 ஏற்றத்துடனும், 727 இறக்கத்துடனும், 94 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியை பொறுத்தவரை ஆர்.எஸ்.ஐ., 50-க்கு மேலே இருக்கின்றது. எம்.ஏ.சி.டி., ஏற்றத்துக்கு சாதகமாகவும், ஆசிலேட்டர்கள் ஓவர்பாட் நிலைமையை அடையாமலும் இருக்கின்றன.

