நிப்டி 24,080க்கு மேலே நிலைபெற்றால் ஏற்றம் தொடரும்
நிப்டி 24,080க்கு மேலே நிலைபெற்றால் ஏற்றம் தொடரும்
ADDED : ஜூலை 23, 2026 02:46 AM

22-07-2026
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
எட்டர்னல் 289.50 2.90
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 753.90 -7.55
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் 234.89 -5.14
டாடா ஸ்டீல் 185.99 -1.25
ஐ.டி.சி.,. 280.80 -0.20
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
எஸ் பேங்க் 23.23 0.09
சுஸ்லான் எனர்ஜி 52.89 -0.28
ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 109.75 -1.73
ஐ.டி.எப்.சி., ஏர்போர்ட்ஸ் 80.55 -1.11
என்.எம்.டி.சி., 83.35 -0.58
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
பந்தன் பேங்க் 174.10 -34.73
ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் 766.00 -34.90
கரூர் வைஸ்யா பேங்க் 337.00 -3.30
ஐநாக்ஸ் விண்ட் 76.75 -2.27
பிரமல் பார்மா 177.05 -7.76
மற்ற சில பங்குகளின் விலை விவரம்
எவரெடி இண்டஸ்ட்ரீஸ் 360.55 9.90
தி கிரேட் ஈஸ்ட்டர்ன் ஷிப்பிங் கம்பெனி 1,431.20 22.30
ஹிந்துஸ்தான் யூனிலீவர் 2,157.00 14.50
ஐ.டி.சி., 280.80 -0.20
மாரிக்கோ 862.00 8.45
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 24,150.45 24,166.30 23,961.40 23,996.25
நேற்று 37 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி, அதன் பின் தொடர்ந்து இறங்கி நாளின் இறுதியில் 191 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி100' குறியீடு குறைந்த பட்சமாக 0.77 சதவீதமும், 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு அதிக பட்சமாக 1.82 சதவீதமும் குறைந்து முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 2 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 19 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிக பட்சமாக 0.65 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மீடியா' குறியீடு அதிக பட்சமாக 2.68 சதவீத இறக்கத்துடனும் முடிந்தன. வர்த்தகம் நடந்த 3,409 நிறுவனங்களின் பங்குகளில் 1,068 ஏற்றத்துடனும்; 2,231 இறக்கத்துடனும்; 110 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன.
மூன்றாவது நாளாக தொடர்ந்து பலவீனம் வெளிப்பட்டதால் முக்கிய குறுகிய கால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே சென்று நிறைவடைந்துள்ளது. ஆர்.எஸ்.ஐ., (48.61), நெகட்டிவ் எம்.ஏ.சி.டி., ஹிஸ்டோகிராம் மற்றும் ஆர்.ஓ.சி., (-1.78) என அனைத்துமே மொமென்டம் பலவீனமாகிவிட்டதையே சுட்டிக்காட்டுகின்றன.
உடனடி சப்போர்ட் 23,950ல் இருக்கிறது. அதைத் தொடர்ந்து 23,850 மற்றும் 23,700ல் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. 24,080 மற்றும் 24,180ல் ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது. நிப்டி 24,080க்கு மேலே சென்று நிலைபெறாதவரை குறுகிய கால அமைப்பு பியரிஷாகவே இருக்க வாய்ப்புள்ளது.
எனவே, குறுகிய காலத்தில் ஏற்படும் ஏற்றங்கள் நீடித்ததாக அமையாமல் போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஆதரவு 23,915 23,835 23,755
தடுப்பு 24,120 24,245 24,325
