UPDATED : ஜன 23, 2026 10:33 AM
ADDED : ஜன 23, 2026 04:15 AM

அ மெரிக்காவில் இப்போது வேகமாக டிரெண்டாகி கொண்டிருப்பது, 'நோ பை ஜனவரி' அல்லது 'நோ ஸ்பெண்டு ஜனவரி' எனும் ஒரு நிதி சவால். இளம் தலைமுறையினர் இதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஷயம் இதுதான்... ஜனவரியில் அத்தியாவசியமற்ற பொருட்களை வாங்குவதில்லை என முடிவு எடுத்து, அதை செயல்படுத்துவதுதான் இந்த சேலஞ்ச்.
![]() |
இந்த சேலஞ்ச் பல ஆண்டுகளாக இருந்தாலும், 2024-ல் 'டிக் டாக்' போன்ற சமூக ஊடகங்களின் வாயிலாக அதிகம் பிரபலமானது. பொருளாதார அழுத்தம், பணவீக்கம் மற்றும் சேமிப்புக்கான தேவை ஆகிய காரணங்களால், இந்த முயற்சி இளம்வயதினரிடையே அதிக ஆர்வத்தை துாண்டி வருகிறது.
![]() |
நடப்பு ஆண்டில், இது சம்பந்தமான கூகுள் தேடல்கள் 5 ஆண்டு உச்சத்தை எட்டியுள்ளது. அத்துடன் தற்போதைய பொருளாதார சூழலில் மெல்ல, 'நோ பை 2026' என்றும் விரிவடைந்து வருகிறது.
நம்மூரிலும் கூட இதை முயற்சிக்கலாம்!
டிசம்பர் செலவுகள் முக்கிய காரணம்
அமெரிக்காவில் மட்டுமின்றி, பல நாடுகளிலுள்ள மக்கள் பலரும் இந்த சவாலை மேற்கொள்கிறார்கள். இதற்கான முக்கிய காரணம், டிசம்பரில் நடைபெறும் அதிகப்படியான செலவுகள். ஆண்டு இறுதியில் நிறுவனங்கள், 'இயர் எண்டு ஆபர்' போன்ற சலுகைகள் தருவதால், தேவை இருக்கிறதோ இல்லையோ, மக்கள் அதிகளவில் வாங்கி குவித்துவிடுகிறார்கள். இதன் விளைவாக, ஜனவரி மாதத்தில் செலவழிக்க போதுமான பணம் அவர்களிடம் இருப்பதில்லை. மேலும், நிறுவனங்கள் தங்கள் லாபத்தை அதிகமாக காட்டும் 'விண்டோ டிரஸ்ஸிங்' போன்ற வியாபார உத்திகளும் இந்த போக்குக்கு காரணமாக உள்ளன. இதை கடைப்பிடிப்பதால் தேவையற்ற செலவுகள் குறைவதாக, இந்த முயற்சியை மேற்கொள்வோர் கருதுகிறார் -மோகன்குமார் ராமகிருஷ்ணன் செபி ஸ்மார்ட் பயிற்சியாளர்
சவாலில் பங்கேற்க காரணம்?
*விடுமுறை கால அதிக செலவுகளில் இருந்து மீண்டு வருவதற்கு
* தினசரி செலவு பழக்கத்தை முறியடிப்பதற்கு
* அனாவசிய செலவுகளை குறைப்பதற்கு
* மகிழ்ச்சி என்பது ஷாப்பிங் செய்வதில் இல்லை என்பதை புரிந்துகொள்வதற்கு .



