வங்கியில் கணக்கு துவக்க இனி நேரில் போகணும் டிஜிட்டல் நடைமுறைக்கு குட்பை
வங்கியில் கணக்கு துவக்க இனி நேரில் போகணும் டிஜிட்டல் நடைமுறைக்கு குட்பை
ADDED : டிச 14, 2025 02:08 AM

நம் நாடு, டிஜிட்டல்மயமாக்கலை நோக்கி பயணிக்கும் வேளையில், மோசடிகளை தடுக்க, பல முன்னணி வங்கிகள் கணக்கு துவங்குவதில் பழைய நடைமுறைக்கு திரும்பியுள்ளன.
'எஸ்.பி.ஐ., - ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா' போன்ற பெரிய வங்கிகள், டிஜிட்டல் கணக்கு துவங்கும் முறையை முழுமையாக நிறுத்தியுள்ளன.
குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தனது 'இன்ஸ்டா கணக்கு' துவங்கும் சேவையை முழுமையாக நிறுத்திவிட்டு, சம்பள கணக்குகளுக்கு மட்டுமே டிஜிட்டல் முறையை பயன்படுத்துகிறது.
இதனால், புதிய கணக்கு துவங்க நினைப்பவர்கள், அருகில் உள்ள வங்கி கிளைக்கு நேரில் சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்; அல்லது, வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளரின் வீட்டுக்கே வந்து சரிபார்க்கின்றனர்.
ஆள்மாறாட்டம் செய்து வங்கியில் கணக்குகளை துவங்குவது மற்றும் மோசடி செய்த பணத்தை மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் போலி கணக்குகள் துவங்கப்படுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் கூறுகின்றன.
முன்னதாக, கே.ஒய்.சி., நடைமுறையை சரியாக பின்பற்றத் தவறியதற்காக, ரிசர்வ் வங்கி அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, வங்கிகள் தங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக்கியுள்ளன.

