தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.பி.எஸ்., விதிகள் மறு ஆய்வு; 9 பேர் கொண்ட குழு அமைப்பு

 என்.பி.எஸ்., விதிகள் மறு ஆய்வு; 9 பேர் கொண்ட குழு அமைப்பு

 என்.பி.எஸ்., விதிகள் மறு ஆய்வு; 9 பேர் கொண்ட குழு அமைப்பு


ADDED : ஜன 27, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 04:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.பி.எஸ்., எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் முதலீட்டு விதிமுறைகளை மறு ஆய்வு செய்யவும், உலகத்த ரம் வாய்ந்த மாற்றங்களை பரிந்துரைக்கவும், ஒன்பது பேர் கொண்ட 'சார்க்' என்ற உயர்மட்ட குழுவை, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது.

'மோர்கன் ஸ்டான்லி இந்தியா' நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி நாராயணன் ராமச்சந்திரன் தலைமையில், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், 'மோதிலால் ஓஸ்வால்' நிறுவனத்தின் ராம்தேவ் அகர்வால், 'டி.எஸ்.பி., மியூச்சுவல் பண்டு' நிறுவனத் தின் தலைமை செயல் அதிகாரி கல்பென் பாரேக் உள்ளிட்ட முதலீட்டு துறை சார்ந்த முன்னணி நிபுணர்கள் இடம்பெற்றுஉள்ளனர்.

தற்போதுள்ள முதலீட்டு விதிமுறைகளை உலகளாவிய ஓய்வூதிய திட்டங்களுடன் ஒப்பிட்டு, இந்திய சூழலுக்கு ஏற்ப மேம்படுத்துதல், சந்தை அபாயங்களை குறைத்து, நீண்ட கால அடிப்படையில் சந்தாதாரர்களுக்கு அதிக செல்வம் சேரும் வகையில், முதலீட்டு பிரிவுகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றை ஆய்வு செய்து, அடுத்த 9 மாதங்களுக்குள் இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us