ADDED : பிப் 11, 2026 01:20 AM

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான கிராமப்புற மற்றும் சிறுநகர மக்களின் சேமிப்பை முதலீடாக மாற்றும் நோக்கில், தபால் துறையும், தேசிய பங்குச்சந்தையும் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
* இந்தியாவின் மூலை முடுக்கெங்கிலும் உள்ள, 1.64 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள், வாயிலாக இனி மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய முடியும்.
*இதற்காக, தேசிய பங்குச் சந்தையின் 'என்.எஸ்.இ., எம்.எப்., இன்வெஸ்ட்' என்ற தளத்தில் கூடுதல் கட்டணமின்றி முதலீடு செய்யலாம்.
* முதல்கட்டமாக, முதலீட்டாளர்களே நேரடியாக முதலீடு செய்யும் வகையில், 'டூ-இட்-யுவர்செல்ப்' முறை அறிமுகப்படுத்தப்படும்.
* அடுத்தகட்டமாக, நாட்டில் உள்ள 55 சொத்து மேலாண்மை நிறுவனங்களின் அனைத்து திட்டங்களும் இதில் கிடைக்கும்.
* இலக்கு சார்ந்த முதலீடுகள் குறித்த தகவல்கள் பிராந்திய மொழிகளிலேயே வழங்கப்படும்.

