தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'ஓலா எலக்ட்ரிக்' 84 சதவீதம் சரிவு

 'ஓலா எலக்ட்ரிக்' 84 சதவீதம் சரிவு

 'ஓலா எலக்ட்ரிக்' 84 சதவீதம் சரிவு


ADDED : பிப் 28, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஓலா எலக்ட்ரிக்', பங்கு விலை 157 ரூபாயாக உச்சத்தில் இருந்த நிலையில், இப்போது வெறும் 25 ரூபாய்க்கு சரிந்து முதலீட்டாளர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு, 76 ரூபாய் என்ற விலையில் ஐ.பி.ஓ.,வுக்கு வந்த 'ஓலா', பட்டியலிடப்பட்ட சில நாட்களிலேயே 157 ரூபாய் வரை உயர்ந்தது. தற்போது, அதன் உச்ச விலையில் இருந்து 84 சதவீதம் வரை சரிந்து, வர்த்தகமாகி வருகிறது. இதனால் அதன் முதலீட்டாளர்கள் 57,000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்கின்றனர்.

'சர்வீஸ் சென்டர்களில் நிலவும் குளறுபடிகள், போதிய உரிமம் இன்றி செயல்பட்ட காரணத்தால், பல கிளைகளை மூட அரசு உத்தரவிட்டது, 'டி.வி.எஸ்., பஜாஜ்' போன்ற நிறுவனங்கள் 'இ-பைக்' சந்தையில் இறங்கியது ஆகியவை, ஓலாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்த சவாலை சமாளிக்க, அடுத்த 18 மாதங்களில் இந்நிறுவனம் மீண்டும் நிதி திரட்ட வாய்ப்பு இருக்கிறது.

'விலை குறைந்துவிட்டது' என அவசரப்பட்டு, 'ஓலா' பங்குகளை வாங்குவது ஆபத்தானது. நிறுவனத்தின் சேவை தரம் உயர்ந்து, விற்பனை மீண்டும் சூடுபிடித்தால் மட்டுமே இப்பங்கு விலை உயரும்' என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரபல முதலீட்டு நிறுவனமான 'கோல்ட்மேன் சாக்ஸ்', 'ஓலா எலக்ட்ரிக்' பங்கின் இலக்கு விலையை, 52ல் இருந்து 26 ரூபாயாக குறைத்துள்ளது. அதேபோல், 'வாங்கலாம்' என 'சிட்டி' நிறுவனம் பரிந்துரைத்ததை மாற்றி, பங்குகளை விற்றுவிடும்படி எச்சரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us