நேரடி முதலீடுகள் அதிகரித்தாலும் வினியோகஸ்தர்களுக்கு தொடரும் வாய்ப்பு
நேரடி முதலீடுகள் அதிகரித்தாலும் வினியோகஸ்தர்களுக்கு தொடரும் வாய்ப்பு
ADDED : ஆக 26, 2026 12:37 AM

மி யூச்சுவல் பண்டுகளில் 500 ரூபாய்க்கும் குறைவான தொகையில் மேற்கொள்ளப்படும் எஸ்.ஐ.பி., முதலீடுகளில் பெரும்பாலானவை மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர்கள் வாயிலாகவே மேற்கொள்ளப்படுவது தெரியவந்துள்ளது.
'ஆம்பி மற்றும் கிரிசில் இன்டலிஜென்ஸ்' தரவுகளின்படி, 2026 மார்ச்சில் இந்த பிரிவின் எஸ்.ஐ.பி., சொத்துகளில் 78 சதவீதம் ரெகுலர் திட்டங்கள் வாயிலாக வந்துள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது 71 சதவீதமாக இருந்தது. சிறிய தொகையில் எஸ்.ஐ.பி., தொடங்குபவர்களில் பலர் முதல்முறையாக முதலீடு செய்பவர்கள் என்பதால், வினியோகஸ்தர்களின் உதவியை நாடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம், எஸ்.ஐ.பி., தொகை அதிகரிக்கும்போது நேரடி முதலீட்டின் பங்கும் அதிகரித்துள்ளது. 10,000 ரூபாய்க்கும் அதிகமான எஸ்.ஐ.பி., முதலீடுகளில் நேரடி முதலீட்டின் பங்கு கடந்த 2021 மார்ச்சில் 13 சதவீதமாக இருந்தது. இது 2026, மார்ச்சில் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முதலீட்டாளர்களிடம் அதிகரித்துள்ள விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல், ஏ.எம்.சி., தளங்களுக்கான எளிதான அணுகல் ஆகியவை நேரடி முதலீடு அதிகரிக்க காரணமாக உள்ளது.
நேரடி முதலீடு வளர்ந்தாலும், முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டுவதில் வினியோகஸ்தர்களின் பங்கு தொடர்ந்து இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
