'பார்லே இண்டஸ்ட்ரீஸ்' பங்கு 9 நாள் உயர்வுக்கு பின் சரிவு
'பார்லே இண்டஸ்ட்ரீஸ்' பங்கு 9 நாள் உயர்வுக்கு பின் சரிவு
ADDED : ஜூன் 04, 2026 03:03 AM

கடந்த மே 20ல், பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தபோது, இந்தியாவின் பரிசாக 'மெலோடி' மிட்டாய்களை அளித்தார். அதன் பின், அதே நாளில் பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 5 சதவீதம் உயர்ந்தது.
ஆனால், பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் மெலோடி மிட்டாய்களுக்கும் சம்பந்தம் இல்லை. மெலோடியை 'பார்லே புராடெக்ட்ஸ்' என்ற நிறுவனம் விற்பனை செய்கிறது. பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமோ ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு தொழில்களை செய்கிறது. பார்லே புராடெக்ஸ் பங்கு சந்தையில் இல்லாத நிலையில், பெயர் ஒத்துப்போவதால் பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்குக்கு ஜாக்பாட் விலை கிடைத்தது.
கடந்த ஜூன் 2ம் தேதி வரை பார்லே இண்டஸ்ட்ரீஸ் பங்கு தினமும் 5 சதவீதம் உயர்ந்தது. அதன் பின், முதல்முறையாக நேற்று பங்கு விலை கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்தாலும், வர்த்தக முடிவில் மீண்டும் 5 சதவீதம் ஏற்றம் கண்டு முடிவடைந்தது.
மே 20 முதல் ஜூன் 3ம் தேதி வரை இந்த பங்கு கிட்டத்தட்ட 62 சதவீதம் உயர்ந்துள்ளது.
