UPDATED : மே 25, 2026 02:05 AM
ADDED : மே 25, 2026 01:43 AM

உலகளாவிய போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால், நடப்பாண்டில் கடந்த வெள்ளிக்கிழமை வரை நிப்டி 9.28 சதவீதம் சரிந்துள்ள நிலையிலும், 'நிப்டி பார்மா' குறியீடு 8.58 சதவீதம் உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.96 என்ற வரலாற்று வீழ்ச்சியை தொட்டுள்ளது. இது ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு சவாலாக இருந்தாலும், ஏற்றுமதியை நம்பியிருக்கும் நம் நாட்டின் மருந்து நிறுவனங்களுக்கு பெரும் சாதகமாக மாறியுள்ளது.
முக்கிய காரணங்கள் எப்போதும் 'டிமாண்டு' இருக்கக்கூடிய பார்மா துறையை முதலீட்டாளர்கள் விரும்புவது
பணவீக்கம், பொருளாதார மந்தநிலை போன்ற நெருக்கடி காலங்களில் இந்த துறை ரிஸ்க் குறைவானதாக கருதப்படுவது
இந்திய பார்மா நிறுவனங்கள் அமெரிக்கா போன்ற பல்வேறு உலக நாடுகளிடம் இருந்து வருவாய் ஈட்டுவது
மார்ச் காலாண்டில் பெரும்பாலான பார்மா நிறுவனங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருப்பது
பார்மா நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வாயிலாக டாலர் வருவாய் கிடைப்பது.
மந்தமான சூழலில், பார்மா துறையை போல அத்தியாவசிய தேவை கொண்ட துறைகள் மட்டுமே தாக்கு பிடிக்கும். நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருந்தாலும், நோய்வாய் படும் மனிதர்களுக்கு மருந்துகள் தேவைப்பட்டே தீரும். - வி.கே.விஜயகுமார் தலைமை நிபுணர் ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
![]() |

