மருத்துவ காப்பீடு ரூ.12 அறிமுகம் செய்தது 'போன்பே'
மருத்துவ காப்பீடு ரூ.12 அறிமுகம் செய்தது 'போன்பே'
ADDED : நவ 27, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சி று தொழில் முனைவோர், தினக்கூலிகள், குறைந்த வருமானம் கொண்டவர்களை இலக்காக கொண்டு, புதிய குழு மருத்துவ காப்பீட்டை 'போன்பே' அறிமுகம் செய்துள்ளது. 'எச்.டி.எப்.சி., எர்கோ'வுடன் இணைந்து 'சுரக்ஷா சங்கல்ப் பார் பாரத்' என்ற திட்டத்தின் கீழ்
இந்த காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 3 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்யலாம். பிரீமியத் தொகை தினமும் 12 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. 'போன்பே' செயலி வாயிலாக டிஜிட்டல் முறையில் இந்த காப்பீட்டை வாங்கலாம். தனிநபர், மனைவி அல்லது கணவர், குழந்தைகள், பெற்றோர் என குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த காப்பீட்டை சேர்த்து பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

