தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ பி.என்.பி., டெபிட் கார்டு லவுஞ்ச் வசதி ரத்து

 பி.என்.பி., டெபிட் கார்டு லவுஞ்ச் வசதி ரத்து

 பி.என்.பி., டெபிட் கார்டு லவுஞ்ச் வசதி ரத்து


ADDED : பிப் 06, 2026 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 03:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது 'ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு' வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த இலவச உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் வசதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த மாற்றம் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் வாயிலாக, இனி இந்த வகை டெபிட் கார்டை பயன்படுத்தி எல்லோரும் எந்த விமான நிலைய லவுஞ்சிலும் இலவசமாக நுழைய முடியாது.

அதே நேரத்தில், புதிய விதிமுறையின்படி, ஒவ்வொரு காலாண்டு அடிப்படையில் கார்டு வாயிலாக செய்யப்பட்ட செலவுகளை கணக்கில் கொண்டு, இலவச லவுஞ்ச் அனுமதி வழங்கப்படும் என அவ்வங்கி தெரிவித்துள்ளது. அதாவது, குறைந்தபட்ச செலவு வரம்பை பூர்த்தி செய்தால் மட்டுமே, லவுஞ்ச் வசதி கிடைக்கும்.

இந்த மாற்றம், அடிக்கடி விமானப் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us