உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 21, 2026 01:14 AM

அ நிறம் | அளவு
ந வீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் வாயிலாக, நிதிச்சந்தையில் தனது போட்டித்திறனை தக்கவைத்துக் கொள்ளவும், தனது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும் 'பூனாவாலா பின்கார்ப்' நிறுவனம், புதிய 'ஏ.ஐ.,' தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குரல் மற்றும் உரையாடல் வாயிலாக வரும் புகார்களை இனி இந்த தளம் சுயமாக கையாளும். சிக்கலான விஷயங்களை மட்டும் மனித உதவியாளர்களுக்கு மாற்றும். இந்த புதிய 'ஏ.ஐ.,' தளத்தின் உதவியுடன், வாடிக்கையாளர்களுடனான தொடர்புகளில், 80 சதவீதத்தை தானியங்கி முறையில் கையாள, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
