தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 23,600 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது

 23,600 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது

 23,600 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது


ADDED : மே 12, 2026 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 12:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி

இறக்கத்துடனே துவங்கிய நிப்டி, நாளின் இறுதியில் 360 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப்50 குறியீடு' குறைந்தபட்சமாக 0.83 சதவீதமும், 'நிப்டி 100 குறியீடு' அதிகபட்சமாக 1.52 சதவீதமும் சரிவுடன் முடிந்தன.

21 துறை சார்ந்த குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும், 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., & டெலிகாம் குறியீடு' அதிகபட்சமாக 1.07 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ் குறியீடு' அதிகபட்சமாக 3.73 சதவீத இறக்கத்துடனும் முடிந்தன.

வர்த்தகம் நடந்த 3,420 நிறுவனங்களின் பங்குகளில் 961 ஏற்றத்துடனும் 2,364 இறக்கத்துடனும், 95 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன. நிப்டி 14, 21 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே சென்று நிறைவடைந்தது. மொமெண்டம் இண்டிக்கேட்டர்களும் நெகட்டிவ்வாக மாறிவிட்டன.

இதனால் ஏற்றம் வருவதற்கு சற்று தாமதம் ஏற்படும் என்பது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போதைய நிலைமையில் 23,780ல் ஒரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கு கீழே சென்றால் 23,600 மற்றும் 23,450 வரையிலுமே சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

செய்திகள் சாதகமாக இருந்து ஏற்றம் வந்தாலுமே 24,175க்கு மேல் செல்லாதவரை அது நிலைத்திருக்கும் என்று கூற முடியாது.

ஆதரவு 23,745 23,675 23,595

தடுப்பு 23,945 24,065 24,150

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us