ADDED : அக் 16, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத் துறையைச் சேர்ந்த 'பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்' நிறுவனத்திடம் இருந்து 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளதாக, ஹைதராபாதைச் சேர்ந்த உள்கட்டமைப்பு கட்டுமான நிறுவனமான 'பவர் மெக்' தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, பவர் மெக் பங்குகள் 5.42 சதவீதம் உயர்வு கண்டு, பங்கு ஒன்றின் விலை 2,975 ரூபாய் அளவுக்கு அதிகரித்தது.எனினும், லாபத்தை பெறும் வகையில் பலர் பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, வர்த்தக இறுதியில் 1.31 சதவீதம் சரிவு கண்டு, பங்கு ஒன்றின் விலை 2,785 ரூபாய் என்றளவில் நிலைபெற்றது.