உள்ளடக்கத்திற்கு செல்ல

'பிரஸ்டீஜ்' குழுமத்தின் ரூ.2,700 கோடி ஐபிஓ, ரத்து
'பிரஸ்டீஜ்' குழுமத்தின் ரூ.2,700 கோடி ஐபிஓ, ரத்து
ADDED : செப் 28, 2026 02:34 AM

அ நிறம் | அளவு
இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான 'பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ்', தனது ஹோட்டல் வணிக பிரிவான 'பிரஸ்டீஜ் ஹாஸ்பிடாலிட்டி வென்ச்சர்ஸ்' நிறுவனத்தின் 2,700 கோடி ரூபாய் ஐ.பி.ஓ., திட்டத்தை திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
சந்தை நிலவரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் உத்தி சார்ந்த காரணங்களால் இந்த தீர்மானத்தை குழுமத்தின் வாரிய குழு எடுத்துள்ளதாக பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை நிலவரம் சீரடையும் பட்சத்திலும், உரிய அனுமதிகள் கிடைக்கும் பட்சத்திலும் எதிர்காலத்தில் புதிய டி.ஆர்.ஹெ.பி., ஆவணங்களை தாக்கல் செய்து ஐ.பி.ஓ., வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
