‘நிப்டி50’ நிறுவனங்களில் புரமோட்டர்களின் பங்கு சரிவு
‘நிப்டி50’ நிறுவனங்களில் புரமோட்டர்களின் பங்கு சரிவு
UPDATED : நவ 11, 2026 12:00 AM
ADDED : நவ 10, 2026 10:06 PM

கடந்த செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி, நிப்டி குறியீட்டில் உள்ள நிறுவனங்களில், புரமோட்டர்களின் பங்கு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 40 சதவீதமாக குறைந்துள்ளது என்று என்.எஸ்.இ., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மதிப்பு அடிப்படையில், புரமோட்டர்களின் பங்கு 73.20 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. தனியார் புரமோட்டர்களின் பங்கு 26.90 சதவீதமாகவும், அரசின் பங்கு 7.60 சதவீதமாகவும், வெளிநாட்டு புரமோட்டர்களின் பங்கு 5.70 சதவீதமாகவும் குறைந்துள்ளது. எனினும், தனிநபர் புரமோட்டர்களின் பங்கு 7.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவர்களின் பங்கு மதிப்பு 36.40 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
மியூச்சுவல் பண்டுகள்
நிப்டி நிறுவனங்களில் உள்நாட்டு மியூச்சுவல் பண்டுகளின் பங்கு, ஜூன் காலாண்டில் 51.40 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 49.40 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த 21 ஆண்டுகளில் முதல்முறையாக 50 சதவீதத்துக்கு கீழே இறங்கி உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
