அரசு பத்திரங்களில் முதலீடு வெளிநாட்டவர்களுக்கு தளர்வு
அரசு பத்திரங்களில் முதலீடு வெளிநாட்டவர்களுக்கு தளர்வு
ADDED : செப் 12, 2025 01:57 AM

அ ரசு பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு, பல்வேறு விதிகளில் இருந்து தளர்வு அளிக்கப்படுவதாக, செபி தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது:
அரசு பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், இனி பதிவு செய்யும் போது, முதலீட்டாளர் வகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துக்கு உரிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பதிவை புதுப்பிப்பது எளிமைப்படுத்தப்படும். வழக்கமாக அன்னிய முதலீட்டாளர்கள் போல் இல்லாமல், இந்த வகை முதலீட்டாளர்கள், எந்தவொரு மாற்றம் குறித்தும் செபியிடம் முன்னரே தெரிவிப்பது, மாற்றம் இல்லை என்ற உறுதிமொழிப்படிவம் தாக்கல் செய்வது ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதே சமயம், நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஏற்படும் பெரிய மாற்றம் குறித்து தெரிவிப்பது அவசியம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.