வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 'பான்' கார்டு விதிகளில் தளர்வு
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 'பான்' கார்டு விதிகளில் தளர்வு
ADDED : மே 17, 2026 12:38 AM

வெ ளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், அவர்களுக்கான 'பான்' விண்ணப்ப விதிகளில் 'மத்திய நேரடி வரிகள் வாரியம்' சில முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
பான் விண்ணப்ப படிவங்களில் செய்யப்பட்ட மாற்றங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பல சிரமங்களை சந்தித்தனர். இது குறித்து செபி, வருமான வரித்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
முக்கிய தளர்வுகள் பொது விண்ணப்ப படிவத்தில் உள்ள அதிகார பூர்வ பிரதிநிதியின் பெயர் போதுமானது
அந்த பிரதிநிதியின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி இல்லையெனில், சம்பந்தப்பட்ட 'எப்.பி.ஐ.,' நிறுவனத்தின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கலாம்
பான் எண், ஆதார் அல்லது பாஸ்போர்ட் விபரங்கள் இல்லையெனில், அதற்கு பதிலாக எப்.பி.ஐ.,யின் பதிவு எண்ணை பயன்படுத்தலாம்
டின் நம்பர் இல்லையெனில், அந்த பகுதியில் “0000000000” என குறிப்பிடலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
