தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ரிலையன்ஸ் பங்கு 12% உயர்வு 6 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்

ரிலையன்ஸ் பங்கு 12% உயர்வு 6 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்

ரிலையன்ஸ் பங்கு 12% உயர்வு 6 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 10:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 10:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘ரி லையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 12 சதவீதம் உயர்ந்தன. இதன்வாயிலாக அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 1.83 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 17.58 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றம் கண்டது.

ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் நேற்று தேசிய பங்கு சந்தையில், 11.59 சதவீதம் உயர்ந்து 1,300 ரூபாய்க்கு முடிந்தன. கடந்த 2020 ஏப்ரல் 7ம் தேதிக்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஏற்றம் இதுவாகும்.

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டைவிட 33.80 சதவீதம் அதிகரித்து, வரலாறு காணாத வகையில் 29,550 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருவாய் 27.80 சதவீதம் அதிகரித்து 3.62 லட்சம் கோடி ரூபாயாகவும், செயல்பாட்டு லாபம் 23.90 சதவீதம் உயர்ந்து 62,409 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

நாட்டின் சந்தை மதிப்பில் முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் வலுவான காலாண்டு முடிவுகள், ஒட்டுமொத்த பங்கு சந்தை ஏற்றத்திற்கும் முக்கிய காரணமாக அமைந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us