க்யு.ஐ.பி., விலைக்கான விதிகள் மாற்ற 'செபி'யிடம் கோரிக்கை
க்யு.ஐ.பி., விலைக்கான விதிகள் மாற்ற 'செபி'யிடம் கோரிக்கை
ADDED : ஏப் 14, 2026 12:44 AM

ந ம் நாட்டின் பங்குச்சந்தையில் நிலவும் சரிவு காரணமாக, நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கான 'க்யு.ஐ.பி.,'முறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, பங்குகளை விற்பனை செய்வதற்கான விலையை நிர்ணயிக்கும் விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என வங்கிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் செபியிடம் வலியுறுத்திஉள்ளன.
முக்கிய விஷயங்கள்
* தற்போதைய விதிகளின்படி, 'க்யு.ஐ.பி.,' பங்குகளை விற்பனை செய்வதற்கான குறைந்தபட்ச விலை, கடந்த 2 வாரங்கள் அல்லது 26 வாரங்களின் சராசரி விலையில் எது அதிகமோ அதை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது
* கடந்த சில மாதங்களாக பங்கு சந்தை சரிந்து வருவதால், தற்போதைய சந்தை விலையை விட 26 வார சராசரி விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால், சந்தை விலையை விட அதிக விலைக்கு பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் முன்வருவதில்லை
* 26 வார கால சராசரியை கணக்கில் கொள்வதற்கு பதிலாக, அதை 8 முதல் 10 வாரங்களாக குறைக்க வேண்டும்
* 2026-ம் ஆண்டில் இதுவரை வெறும் 4 நிறுவனங்கள் மட்டுமே 'க்யு.ஐ.பி.,' மூலம் நிதி திரட்டியுள்ளன. இது கடந்த 2025ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது மிக குறைவு
* சந்தையில் நிலவும் மந்தமான சூழலில், நிறுவனங்கள் தடையின்றி நிதி திரட்டவும், வளர்ச்சிக்கான முதலீடுகளை உறுதி செய்யவும் இந்த விதிமுறை மாற்றங்கள் அவசியமானவை என முதலீட்டு வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
