ADDED : நவ 27, 2025 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பே ங்க் ஆப் பரோடா' வங்கியின் துணை நிறுவனமான பாப்கார்டு, வழக்கமான பரிவர்த்தனைகளுக்கும் புதிய 'கேஷ்பேக் கிரெடிட் கார்டை' அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைன் தளங்கள், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் உட்பட, பரந்த அளவிலான அன்றாட செலவுகளுக்கு கேஷ்பேக் கிடைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழியாக செய்யும் செலவுகளுக்கு 5 சதவீதமும், மற்ற அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஒரு சதவீதமும் கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டைக்கு மாதம் 49 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 499 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

