
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஆஜியோ மற்றும் ஜியோ மார்ட் தளங்களில், ரிலையன்ஸ் எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, வெகுமதி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, ஒவ்வொரு 100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கும் போது, பிரைம் உறுப்பினர்கள் எனில் 20 புள்ளிகளும், பிரைம் அல்லாத உறுப்பினர்கள் எனில் 10 புள்ளிகளும் வழங்கப்படும்.
இதற்கு முன்னர், பிரைம் உறுப்பினர்களுக்கு 10 புள்ளிகளும்; பிரைம் அல்லாத உறுப்பினர்களுக்கு 5 புள்ளிகளும் வழங்கப்பட்டு வந்தன.
மற்றுறொரு அறிவிப்பில், நவ., 1 முதல் எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, மூன்றாம் தரப்பு செயலிகள், வாலட் ஆகியவற்றின் வாயிலாக 1,000 ரூபாய்க்கு மேல் கல்வி கட்டணம் செலுத்துவோருக்கு, 1 சதவீதம் பரிவர்த்தனை கட்டணமாக பிடித்தம் செய்யப்படும் என எஸ்.பி.ஐ., கார்டு அறிவித்துள்ளது.