UPDATED : ஜன 31, 2026 01:33 AM
ADDED : ஜன 31, 2026 01:32 AM

ஹெச்.டி.எப்.சி., இன்பினியா 'ரிடெம்ப் ஷ ன்' மாற்றம்
'இ ன்பினியா கிரெடிட் கார்டு' ரிவார்டு புள்ளிகளை மாற்றுவதற்கான விதிகள், வரும் பிப்., 1 முதல் அமலுக்கு வருவதாக ஹெச்.டி.எப்.சி., வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, ரிவார்டு புள்ளிகளை மாதத்துக்கு ஐந்து முறை வரை பணமாகவோ, பொருட்களாகவோ மாற்றி கொள்ளலாம். முன்னர், இது மாதத்துக்கு மூன்று முறை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இதே போன்று, ஒவ்வொரு முறை கிரெடிட் கார்டை பயன்படுத்தி, 150 ரூபாய்க்கு மேல் செலவிடும் போது, ஐந்து ரிவார்டு புள்ளிகளை வாடிக்கையாளர் பெறுவர். ஸ்மார்ட்பை வாயிலாக பொருட்கள் வாங்கும் போது, அதிகபட்சமாக 10 மடங்கு வரை, ரிவார்டு புள்ளிகள் கிடைக்கலாம். மேலும், ஒரு சுழற்சியில், அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் அல்லது 50,000 ரிவார்டு புள்ளிகளை பணமாகவோ, பொருட்களாகவோ மாற்றி கொள்ளலாம்.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ரிவார்டு புள்ளிகள் குறைப்பு
ஐ .சி.ஐ.சி.ஐ., வங்கி, தன் குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளில், சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கான ரிவார்டு புள்ளிகள் குறைப்பு, வரும் பிப்., 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
'இன்ஸ்டன்ட் பிளாட்டினம்' கிரெடிட் கார்டுகளுக்கான 'புக் மை ஷோ' தளத்தின் நன்மைகளை திரும்ப பெறுவதாகவும், பல்வேறு வகை கிரெடிட் கார்டுகளுக்கான போக்குவரத்து தொடர்பான ரயில், பொது போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கு அளிக்கும் ரிவார்டு புள்ளிகளுக்கும் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக 'ரூபிக்ஸ், சபையரோ மற்றும் எமரால்டு' ஆகிய பிரீமியம் கார்டுகளுக்கு மாதத்துக்கு 20,000 ரூபாய் வரையும், 'கோரல், பிளாட்டினம்' போன்ற சாதாரண கார்டுகளுக்கு 10,000 ரூபாய் வரை மட்டுமே ரிவார்டு புள்ளிகள் கிடைக்கும். மேலும், காப்பீடு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு 40,000 ரூபாய் வரை செலவிடும் பயனர்களுக்கு ரிவார்டு புள்ளிகள் தொடரும் என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது.

