தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சேமிப்பு கணக்குகளுக்கு வட்டியை குறைத்த ஆர்.பி.எல்.,

 சேமிப்பு கணக்குகளுக்கு வட்டியை குறைத்த ஆர்.பி.எல்.,

 சேமிப்பு கணக்குகளுக்கு வட்டியை குறைத்த ஆர்.பி.எல்.,


ADDED : ஜன 16, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 01:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வா டிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டியை, 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாக ஆர்.பி.எல்., வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து, வங்கியின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் அரை சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த வகை கணக்குகளுக்கு 6.50 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் இனி 6 சதவீதமாக இருக்கும்.

25 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரை கணக்கில் இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த வட்டி விகித குறைப்பு பொருந்தும்.

புதிய வட்டி விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us