தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ மல்டிகேப் பண்டுகளில் ரூ.16,078 கோடி முதலீடு

 மல்டிகேப் பண்டுகளில் ரூ.16,078 கோடி முதலீடு

 மல்டிகேப் பண்டுகளில் ரூ.16,078 கோடி முதலீடு


UPDATED : ஜூலை 31, 2026 03:02 AM

ADDED : ஜூலை 31, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2026 03:02 AM ADDED : ஜூலை 31, 2026 02:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் மல்டிகேப் மியூச்சுவல் பண்டுகளில் முதலீட்டாளர்கள் 16,078 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக ஆம்பி தெரிவித்துள்ளது.

இதில், ஜூன் மாதத்தில் மட்டும் 3,070 கோடி ரூபாய் முதலீடு பதிவாகியுள்ளது.

மல்டிகேப் பண்டுகள், லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்வதால், ஒரே பண்டு வாயிலாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகின்றன. செபி விதிகளின்படி, இந்த மூன்று பிரிவுகளிலும் குறைந்தபட்சம் தலா 25 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.

மல்டிகேப் பண்டுகள் பல்வேறு சந்தை மதிப்புள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதால், நீண்டகாலத்தில் நல்ல வளர்ச்சி வாய்ப்பை வழங்கலாம்.



இருப்பினும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் கட்டாய முதலீடு இருப்பதால், விலை ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கக்கூடும்.

எனவே, முதலீட்டாளர்கள் தங்களின் இலக்கு, முதலீட்டு காலம் மற்றும் ரிஸ்க் ஏற்கும் திறனை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மல்டிகேப் பண்டுகளில் முதலீடு மாதம் நிகர முதலீடு(ரூ.கோடியில்) ஜனவரி 1,995 பிப்ரவரி 1,934 மார்ச் 2,982 ஏப்ரல் 3,806 மே 2,291 ஜூன் 3,070 மொத்தம் 16,078



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us