UPDATED : நவ 23, 2026 02:37 AM
ADDED : நவ 22, 2026 10:30 PM

பங்கு சந்தையில் இந்த வாரம் மூன்று நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக, 3,300 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளன. இதில் இரண்டு மெயின்போர்டு மற்றும் ஒரு எஸ்.எம்.இ., நிறுவனம் அடங்கும்.
மருத்துவ உபகரண தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 'இன்டெக்ரிஸ் மெட்டெக்' நிறுவனம், கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் திரட்டவுள்ளது.
கேட்டரிங் மற்றும் உணவக சேவையில் ஈடுபடும் 'புட்லிங்க் எப் அண்டு பி ஹோல்டிங்ஸ்' புதிய பங்குகள் வாயிலாக 192 கோடி ரூபாயும், பங்குதாரர்களின் பங்கு விற்பனை வாயிலாகவும் நிதி திரட்டுகிறது.
இவ்விரு நிறுவனங்களும் பங்கு விலையை இன்னும் அறிவிக்கவில்லை. எஸ்.எம்.இ., பிரிவில் 'ஸ்ரீ சித்திவிநாயக் கிரீன்டெக்' கிட்டத்தட்ட 94 கோடி ரூபாய் திரட்டுகிறது. இதனிடையே, கோல் இந்தியாவின் துணை நிறுவனமான மகாநதி கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தின் 8,981 கோடி ரூபாய் ஐ.பி.ஓ., இன்றுடன் (நவ., 23) முடிவடைந்து, வரும் நவ., 27-ல் பட்டியலிடப்படுகிறது.

