முடங்கி கிடக்கும் ரூ.29,000 கோடி: ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,யின் புதிய திட்டம்
முடங்கி கிடக்கும் ரூ.29,000 கோடி: ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,யின் புதிய திட்டம்
ADDED : ஜூன் 27, 2026 11:18 PM

பாலிசிதாரர்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும், அவர்களின் குறைகளை தீர்க்கவும் 'பாலிசிதாரர்கள் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி' என்ற புதிய திட்டத்திற்கான வரைவு வழிகாட்டுதல்களை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வெளியிட்டுள்ளது.
'சப்கா பீமா சப்கா ரக்ஷா சட்டம், 2025'ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்திற்காக, முதற்கட்ட மாக 800 கோடி ரூபாய் நிதியை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., ஒதுக்கியுள்ளது. மேலும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் பிரீமி யம் வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இந்த நிதிக்கு வழங்க வேண்டுமா என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளையும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., கோரியுள்ளது.
முக்கிய அம்சங்கள்
இந்திய காப்பீட்டு துறையில் உரிமை கோரப்படாமல் முடங்கி கிடக்கும் 29,305 கோடி ரூபாய் பாலிசி பணத்தை கண்டுபிடித்து, உரியவர்களிடம் அல்லது அவர்களின் வாரிசுகளிடம் கொண்டு சேர்க்க புதிய இணையதளம் உருவாக்கப்படும்
வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், பாலிசிதாரர்கள் தங்களின் இன்சூரன்ஸ் கிளைம்களை மிக விரைவாக பெறுவதற்கு ஏதுவாக, எஸ்.எம்.எஸ்., வாட்ஸாப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக செய்திகள் பரிமாறப்படும்
கிராமப்புற மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் காப்பீட்டு விழிப்புணர்வு பிரசாரங்கள், 'ஹெல்ப் லைன்கள் மற்றும் சாட்பாட்' வசதிகள் அறிமுகப்படுத்தப்படும்.
மூத்த குடிமக்கள் மற்றும் கிராமப்புற பாலிசிதா ரர்கள் தங்களின் புகார்களை எளிதாக பதிவு செய்யும் வகையில், 'இன்சூரன்ஸ் ஓம்பட்ஸ்மே' கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் புகார் தளங்கள் இன்னும் எளிமையாக்கப்படும்.
