தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வேதாந்தா பங்குதாரர்களுக்கு ரூ.63,500 கோடி ஜாக்பாட்

 வேதாந்தா பங்குதாரர்களுக்கு ரூ.63,500 கோடி ஜாக்பாட்

 வேதாந்தா பங்குதாரர்களுக்கு ரூ.63,500 கோடி ஜாக்பாட்


ADDED : ஜூன் 16, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 07:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வேதாந்தா' நிறுவனத்தில் இருந்து 4 நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு நேற்று பங்கு சந்தையில் பட்டியலானதால், பங்குதாரர்களின் மதிப்பு கிட்டத்தட்ட 63,500 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

வேதாந்தா நிறுவனத்தில் இருந்து 'வேதாந்தா அலுமினியம் மெட்டல், வேதாந்தா பவர், வேதாந்தா அயர்ன் அண்டு ஸ்டீல், வேதாந்தா ஆயில் அண்டு கேஸ்' ஆகிய 4 நிறுவனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான ரிக்கார்டு தேதி கடந்த ஏப்ரல் 29. நேற்று 4 நிறுவனங்களும் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டன.

ரிக்கார்டு தேதிக்கு முன், வேதாந்தா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3,02,371 கோடி ரூபாயாக இருந்தது. நேற்று 5 வேதாந்தா நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு 3,65,830 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது, 2 மாதங்களுக்குள் முதலீட்டாளர்களுக்கு 22.50 சதவீத வருமானம் கிடைத்துள்ளது; முதலீட்டு மதிப்பு 63,459 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us