வரலாறு காணாத வீழ்ச்சி ரூபாய் மதிப்பு 95.34 ஆக சரிவு
வரலாறு காணாத வீழ்ச்சி ரூபாய் மதிப்பு 95.34 ஆக சரிவு
ADDED : மே 01, 2026 02:05 AM

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்றைய வர்த்தகத்தில் 95.34 என்ற புதிய வீழ்ச்சியை பதிவு செய்தது. இதற்கு முன்பாக, கடந்த மார்ச் மாத இறுதியில் அதிகபட்ச சரிவாக 95.21 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பு, இதுவரை கிட்டத்தட்ட 5 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது.
நடப்பாண்டின் இறுதியில் இது 96.80 வரை செல்லக்கூடும் என்றும், ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் தங்கம் இறக்குமதியை குறைப்பது மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவையை சந்தைக்கு வெளியே கையாள்வது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்றும், இதே நிலைமை தொடர்ந்தால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயமும் ரிசர்வ் வங்கிக்கு ஏற்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
சரிவுக்கான காரணங்கள்
* கச்சா எண்ணெய் விலை 2022ம் ஆண்டிற்கு பிறகு இல்லாத அளவாக ஒரு பேரல் 126.10 டாலராக உயர்ந்திருப்பது இந்தியா போன்ற அதிக இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
* அன்னிய முதலீட்டாளர் கள், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 2,000 கோடி டாலர் மதிப்பிலான இந்திய பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை விற்பனை செய்து வெளியேறியு ள்ளனர்
*அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித கொள்கை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் நிலவும் சர்வதேச அரசியல் பதற்றங்கள் ரூபாயின் மதிப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
