ரூபாய் மதிப்பு: நிறுவனங்கள் கணிப்பு: சர்வதேச நிதி நிறுவனங்கள் கணிப்பு
ரூபாய் மதிப்பு: நிறுவனங்கள் கணிப்பு: சர்வதேச நிதி நிறுவனங்கள் கணிப்பு
UPDATED : நவ 27, 2026 12:00 AM
ADDED : நவ 26, 2026 11:18 PM

அக்டோபர் மாத தொடக்கம் முதலே வலுவடைந்து வரும் இந்திய ரூபாய், நடப்பு வார தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.92.17 என்ற 8 மாத உச்சத்தை தொட்டது. இந்நிலையில், அதிக அளவிலான அன்னிய முதலீடுகளின் வரவு மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு ஆகியவை இந்திய ரூபாய்க்கு பலமான ஆதரவை அளித்துள்ளதாக ‘ராய்ட்டர்ஸ்’ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
காரணங்கள்
ரூபாய் மீதான முதலீட்டாளர்களின் சாதகமான நிலைப்பாடு
நடப்பு ஆண்டின் முதல் 10 மாதங்களில் அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்கு சந்தையிலிருந்து 2.87 லட்சம் கோடி ரூபாய் திரும்பப் பெற்றிருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் மட்டும் 1.29 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை மீண்டும் முதலீடு செய்திருப்பது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க உதவும் என்ற விஷயம்.
கணிப்புகள்
ரூபாய் மதிப்பு நீண்ட காலத்தில் ஏற்றம் காணுமா என்பது குறித்து சர்வதேச நிதி நிறுவனங்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
பார்க்லேஸ்: ரூபாய் மீதான சாதகமான போக்கு குறுகிய காலத்திற்கு நீடிக்கும். இருப்பினும், ரிசர்வ் வங்கி, தனது அன்னிய செலாவணி கையிருப்பை மீண்டும் கட்டமைக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதால், தற்போதைய தற்காலிக எழுச்சிக்கு பிறகு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு படிப்படியாக சற்று குறைய வாய்ப்புள்ளது.
எஸ்.எம்.பி.சி.,: முதலீட்டு பரவலாக்கம் மற்றும் ஏ.ஐ., பங்குகளுக்கு எதிரான போக்கு இந்திய ரூபாய்க்கு உதவியுள்ளது.
வலுவான அமெரிக்க டாலர் மற்றும் அன்னிய முதலீடுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதன் காரணமாக, அடுத்த ஆண்டில் ரூபாய் மதிப்பு 95 முதல் 96 என்ற வரம்பில் இருக்கக்கூடும்.
