ADDED : மே 13, 2026 12:37 AM

மே ற்கு ஆசிய போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 40 காசுகள் சரிந்து, 95.68 என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ரூபாய் மதிப்பு 95.30 - 96 வரை செல்ல வாய்ப்புள்ளதாகவும், ரிசர்வ் வங்கி தலையிட்டால் மட்டுமே, ரூபாய் மதிப்பு சரிவது தடுக்கப்படும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணங்கள்
* ஈரான் வழங்கிய அமைதி திட்டத்தை 'டிரம்ப்' நிராகரித்ததால், போர் அபாயம் அதிகரித்து உலகளாவிய சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
* பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையால், நாட்டின் பொருளாதார நிலை குறித்து முதலீட்டாளர்களிடையே அதிகரித்த கவலை
* சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 107.43 டாலராக அதிகரித்தது
* கச்சா எண்ணெய் விலை உயர்வால் இறக்குமதி செலவு அதிகரித்து, ரூபாய் மீது கடும் அழுத்தம்.
