
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்வி இன்ஜினியரிங்
ஆர் வி இன்ஜினியரிங் கன்சல்டன்ட் புதிய பங்கு வெளியீடுக்க அனுமதி கோரி செபியிடம் விண்ணப்பித்து உள்ளது.
ஹை தராபாதை சேர்ந்த உள்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான, 'ஆர்வி இன்ஜினியரிங் கன்சல்டன்ட்' புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பித்து உள்ளது.
முதலீட்டாளர்களின் 67.50 லட்சம் பங்குகள் விற்பனையுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 202.50 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டு உள்ளது.
திரட்டும் முதலீட்டை, கடன்களை திருப்பிச் செலுத்துவதுடன், இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பிரிட்டனில் உள்ள துணை நிறுவனங்களில் முதலீடு செய்யவும் பயன்படுத்த உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.