தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கிரெடிட் கார்டு அபராதங்களை உயர்த்தியது எஸ்.பி.ஐ.,

 கிரெடிட் கார்டு அபராதங்களை உயர்த்தியது எஸ்.பி.ஐ.,

 கிரெடிட் கார்டு அபராதங்களை உயர்த்தியது எஸ்.பி.ஐ.,


UPDATED : மே 05, 2026 02:30 AM

ADDED : மே 05, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2026 02:30 AM ADDED : மே 05, 2026 02:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எஸ் .பி.ஐ., கிரெடிட் கார்டு' வாடிக்கையாளர்கள், தங்களின் நிலுவைத் தொகையை செலுத்துவதில் தாமதம் செய்தால் வசூலிக்கப்படும் தாமதக் கட்டணங்களை எஸ்.பி.ஐ., கார்டு நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு 2026, மே 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

குறிப்பாக, குறைந்தபட்ச நிலுவைத் தொகையை கூட செலுத்தாதவர்களுக்கு இந்த கட்டணங்கள் பொருந்தும்.

புதிய அறிவிப்பின்படி, 101 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரையிலான நிலுவைத் தொகைக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு முன், 101 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான நிலுவைத் தொகைக்கு தாமதக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தற்போது 100 ரூபாய் தாமதக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Image 1572809


அதேபோல, 501 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலான நிலுவைத் தொகைக்கு, இதற்கு முன் 400 ரூபாய் தாமதக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1,000 ரூபாய்க்கு மேலான நிலுவைத் தொகை படிநிலைகளுக்கு கட்டணத்தில் மாற்றமில்லை.

தொடர்ந்து இரண்டு சுழற்சிகளுக்கு குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால், அதற்கு கூடுதலாக 100 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us