எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு மாக்னம் ஹைப்ரிட் லாங் ஷார்ட்
எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு மாக்னம் ஹைப்ரிட் லாங் ஷார்ட்
ADDED : செப் 25, 2025 11:45 PM

புதுடில்லி:எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம், 'மாக்னம் ஹைப்ரிட் லாங் ஷார்ட் பண்டு' என்ற புதிய பண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பண்டின் கீழ், பங்குகள், கடன் பத்திரங்கள், முன்பேர வணிகம், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் என பல விதமான சொத்துக்களில் முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள முதலீட்டாளர்கள், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சமாக, 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 10,000 ரூபாய் என்ற அடிப்படையில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.
அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாமல், ஆப்டிமல் ரிஸ்க் உள்ள, அதாவது அதிகபட்ச ஆதாயம் தரும் அதே வேளையில், கட்டுப்படுத்தக்கூடிய ரிஸ்க் உடைய பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை கருத்தில் கொண்டு, இந்த பண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
'நிப்டி 50 ஹைப்ரிட் காம்போசிட் டெப்ட் 50:50 இண்டெக்ஸ்' குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த பண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.