உள்ளடக்கத்திற்கு செல்ல

பத்திர வெளியீடு ரூ.18,844 கோடி திரட்டும் எஸ்.பி.ஐ.,
பத்திர வெளியீடு ரூ.18,844 கோடி திரட்டும் எஸ்.பி.ஐ.,
ADDED : மே 11, 2026 02:27 AM

அ நிறம் | அளவு
நீண்டகால திட்டங்களுக்கு தேவையான மூலதனத்தை அதிகரிக்கவும், சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கவும், நடப்பு நிதியாண்டில் வெளிநாட்டு சந்தையிலிருந்து எஸ்.பி.ஐ., நிதி திரட்டுகிறது.
இதற்காக, நாளை நடைபெறும் வங்கியின் செயற்குழு கூட்டத்தில், கிட்டத்தட்ட 18,844 கோடி ரூபாய் மதிப்பிலான 'அன்னிய செலாவணி பத்திரங்கள்' வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
சர்வதேச 'ரெகுலேஷன் எஸ்/144ஏ' விதிமுறைகளின் கீழ், அமெரிக்க டாலர் அல்லது பிற அன்னிய செலாவணி மதிப்பில், பொது வெளியீடு அல்லது தனியார் ஒதுக்கீடு வாயிலாக இந்த நிதி திரட்டப்படும். இதில், வட்டி விகிதம் நிலையானதாகவோ அல்லது மாறுபடக்கூடியதாகவோ இருக்கலாம்.
