
நான்கு நிறுவனங்களுக்கு செபி அனுமதி
'நா க் பேக்கேஜிங், சிவாலயா கன்ஸ்ட்ரக்ஷன்' உள்ளிட்ட நான்கு நிறுவனங்களும் புதிய பங்கு வெளியிட செபியிடம் அனுமதி பெற்று உள்ளன.
இந்த நான்கு நிறுவனங்களும் சேர்ந்து, மொத்தமாக 1,400 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி திரட்ட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாக் பேக்கேஜிங் : ரூ. 475 கோடி
சிவாலயா கன்ஸ்ட்ரக்ஷன் : ரூ. 450 கோடி
வர்மோரா கிரானிட்டோ : ரூ. 400 கோடி
பிஹாரி லால் இன்ஜினியரிங் : 110 கோடி
வாக் டெக்னாலஜிஸ் விண்ணப்பம்
சு ற்றுச்சூழல் பொறியியல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை துறையில் செயல்படும் 'வாக் டெக்னாலஜிஸ்' நிறுவனம், ஐ.பி.ஓ., வெளியிடுவதற்காக முதற்கட்ட விண்ணப்பத்தை செபியிடம் சமர்ப்பித்து உள்ளது.
புதிய பங்கு வெளியீடு வாயிலாக இந்நிறுவனம் 375 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது.
இது தவிர, 'ஆபர் பார் சேல்' முறையில் 43.28 லட்சம் பங்குகளை விற்கவும் அனுமதி கேட்டுள்ளது.
எஸ்.எஸ்., ரீடெய்ல் செபியிடம் விண்ணப்பம்
மே ற்கு மாநிலங்களில் 450க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நிறுவனமான எஸ்.எஸ்., ரீடெய்ல், புதிய பங்கு வெளியிட செபியிடம் விண்ணப்பித்து உள்ளது.
ஐ.பி.ஓ.,வில் புதிய பங்குகள் விற்பனை வாயிலாக இந்நிறுவனம் 300 கோடி ரூபாயும்; 200 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, 'ஆபர் பார் சேல்' முறையிலும் விற்பனை செய்து நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது.

