பிஎம்எஸ், நிறுவனங்களுக்கு புதிய விதிகள் செபி அனுமதி
பிஎம்எஸ், நிறுவனங்களுக்கு புதிய விதிகள் செபி அனுமதி
ADDED : செப் 25, 2026 04:20 AM

பி .எம்.எஸ்., நிறுவனங்களுக்கான புதிய விதிகளை செபி அங்கீகரித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்களின் பணத்தை ஐ.பி.ஓ., புதிய கடன் பத்திர வெளியீடுகள் மற்றும் வெளிநாட்டு பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
'டிஸ்கிரேஷனரி பி.எம்.எஸ்.,' முறையில், வாடிக்கையாளர் ஒப்புதலுடன் அவரது முதலீட்டு மதிப்பில் 10 சதவீதம் வரை, முதலீட்டு தரம் கொண்ட பட்டியலிடப்படாத கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மியூச்சுவல் பண்டுகளின் 'டைரக்ட் பிளான்'களில் முதலீடு செய்யலாம். இதற்கு குறைந்தபட்ச முதலீடு 25 லட்சம் ரூபாய். இதற்கான நிர்வாக கட்டணம் அதிகபட்சம் 1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பங்குகள், கடன் பத்திரங்கள், ரீட்ஸ், இ.டி.எப்.,கள், இன்டெக்ஸ் பண்டுகள் உள்ளிட்டவற்றிலும் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளுக்கு 'பெமா' மற்றும் ரிசர்வ் வங்கி விதிகள் பொருந்தும்.
