பயிற்சிக்கான சந்தை தரவுகள் விதிகளை மாற்றுகிறது செபி
பயிற்சிக்கான சந்தை தரவுகள் விதிகளை மாற்றுகிறது செபி
ADDED : டிச 09, 2025 04:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மு தலீட்டாளர்களுக்கு பயிற்சி அளிக்க, தற்போதுள்ள நேரடி சந்தை தரவுகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப் போவதாக செபி தலைவர் துஹின் காந்த பாண்டே அறிவித்துள்ளார். முதலீட்டாளர்களுக்கு கற்றுக்கொடுக்க கடந்த கால சந்தை தரவுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
செபியில் பதிவு பெறாமல், பங்கு பரிந்துரை உள்ளிட்ட ஆலோசனை சேவைகளை வழங்கியதாக, சமீபத்தில், 'பின்புளூயன்ஸர் அவ்துாத் சாத்தே'வின் 546 கோடி ரூபாயை முடக்க செபி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

