உள்ளடக்கத்திற்கு செல்ல

என்.எஸ்.இ., பங்கு வெளியீடு பச்சை கொடி காட்டியது செபி
என்.எஸ்.இ., பங்கு வெளியீடு பச்சை கொடி காட்டியது செபி
ADDED : ஜன 31, 2026 01:38 AM

அ நிறம் | அளவு
எ ன்.எஸ்.இ., எனும் தேசிய பங்குச்சந்தை புதிய பங்கு வெளியீடுக்கு வர, செபி தடையின்மை சான்றிதழ் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தையாக திகழும் என்.எஸ்.இ., கடந்த 2016ல் முதல்முறையாக விண்ணப்பித்த நிலையில், பின்னர் திரும்ப பெற்றது.
இதனை தொடர்ந்து, சில ஆண்டுகளாக ஐ.பி.ஓ.,வுக்கு தயாராகி வந்த என்.எஸ்.இ., நிலுவையில் இருந்த வழக்குகளை செட்டில்மென்ட் செய்த நிலையில், செபி தற்போது அனுமதி வழங்கி உள்ளது. தடையின்மை சான்றிதழ் பெற்றதில் இருந்து, ஐ.பி.ஓ.,வுக்கு வர என்.எஸ்.இ., 8 -முதல் 9 மாதங்கள் எடுத்து கொள்ளும் என கூறப்படுகிறது.
என்.எஸ்.இ., பங்கு விலை அடிப்படையில், சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
