ADDED : டிச 18, 2025 01:45 AM

பங்குச்சந்தை கண்காணிப்பு வாரியமான செபியுடன் என்.எஸ்.டி.எல்., எனப்படும் நேஷனல் செக்யூரிடிஸ் டெபாசிட்டரி நிறுவனத்தின் பிரச்னை முடித்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சில உத்தரவுகளை செயல்படுத்த, என்.எஸ்.டி.எல்., 77 நாட்கள் வரை எடுத்துக் கொண்டதாகவும் இது பாதுகாப்பு விதிகளை புறந்தள்ளிய குறைபாடு மற்றும் முதலீட்டாளர் நலனை பாதுகாப்பதில் அலட்சியம் என்றும் செபி தெரிவித்தது.
என்.எஸ்.டி.எல்.,லின் அவுட்சோர்சிங் பணி ஏற்பாடுகளில் குறை இருப்பதும் செபியின் சோதனைகளில் தெரிய வந்தது. இதனால், கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை நடந்த பல சோதனைகள், சந்திப்புகளைத்
பங்குச்சந்தைகள் மற்றும் செபியிடம் இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை என்.எஸ்.டி.எல்., தாமதமாக செயல்படுத்தி சேவைக் குறைபாடு ஏற்படுத்தியதற்கு 15.58 கோடி ரூபாய் செட்டில்மென்ட் தொகை செலுத்த செபி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் செபி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
பல்வேறு நடைமுறைகள், அமைப்புரீதியான குறைபாடுகள் தொடர்பான 15.18 கோடி ரூபாய் செட்டில்மென்ட் தொகையை நவம்பரில் செலுத்தி விட்டதாக, என்.எஸ்.டி.எல். சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த பிரச்னை முடித்து வைக்கப்படுகிறது. தவறான தகவல் மற்றும் செட்டில்மென்ட் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் வழக்கை மறுவிசாரணை செய்ய தனக்கு அதிகாரம் இருக்கிறது.
இவ்வாறு செபி தெரிவித்துள்ளது.

