தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/போலி நிறுவனங்களை நீக்க செபி நடவடிக்கை

போலி நிறுவனங்களை நீக்க செபி நடவடிக்கை

போலி நிறுவனங்களை நீக்க செபி நடவடிக்கை


UPDATED : நவ 02, 2026 12:00 AM

ADDED : நவ 01, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 12:00 AM ADDED : நவ 01, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வணிக செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் வெறும் பெயரளவில் மட்டுமே பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை நீக்குவதற்கு செபி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அண்மையில் இதுகுறித்து பேசிய செபி தலைவர் துஹின் காந்த பாண்டே, இத்தகைய நிறுவனங்கள் சிறு முதலீட்டாளர்களின் பணத்திற்கு பெருமளவு அச்சுறுத்தலாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்த விஷயங்கள்:

 எந்தவொரு செயல்பாடும் இல்லாத நிறுவனங்களின் பங்குகளை, வாட்-ஸாப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதள குழுக்கள் வாயிலாக பரிந்துரை செய்து, அவற்றின் விலையை செயற்கையாக உயர்த்துகிறார்கள்

 பங்கு விலை உச்சியை அடையும் போது, மோசடி கும்பல்கள் தங்களது பங்குகளை விற்று லாபம் பார்த்து வெளியேறி விடுகின்றனர். இதில் சாதாரண முதலீட்டாளர்கள் சிக்கி பெருமளவிலான பணத்தை இழக்கின்றனர்

 இத்தகைய மோசடிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்காக செபி நிறுவனம் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தேகத்திற்குரிய கணக்குகளையும் வர்த்தக முறைகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us