sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ திசைதிருப்பும் -பதிவுகளை நீக்க செபி ஏவும் 'சுதர்சன்' ஏ.ஐ., ஆயுதம்

 திசைதிருப்பும் -பதிவுகளை நீக்க செபி ஏவும் 'சுதர்சன்' ஏ.ஐ., ஆயுதம்

 திசைதிருப்பும் -பதிவுகளை நீக்க செபி ஏவும் 'சுதர்சன்' ஏ.ஐ., ஆயுதம்


ADDED : மார் 04, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 01:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செ பியின் கட்டுப்பாடுகளை மீறி, முதலீட்டாளர்களை திசைதிருப்பும் வகையில், பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்த தவறான 1.20 லட்சம் பதிவுகளை, 'சுதர்சன்' என்ற நவீன ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீக்கியிருப்பதாக 'செபி' தெரிவித்துள்ளது.

'சுதர்சன்' என்ற ஏ.ஐ., பல மொழிகளில் உள்ள ஆடியோ, வீடியோ மற்றும் எழுத்துப்பூர்வமான பதிவுகளை ஆய்வு செய்யும். எங்கு தவறு நடக்கிறது என்பதை துல்லியமாக கண்டறிந்து, சுட்டிக்காட்டும்.

“மக்களுக்கு நிதிசார்ந்த கல்வியை வழங்குவதற்கும், கருத்து சுதந்திரத்துக்கும் முழு உரிமை உண்டு. ஆனால், கல்வி என்ற போர்வையில் முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தி பணத்தை இழக்க செய்யும் போது, செபி நிச்சயம் தலையிடும். இது, மிக துல்லியமான நடவடிக்கையாக இருக்குமே தவிர, தேவையற்ற கட்டுப்பாடுகளாக இருக்காது” என செபியின் தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்

மேலும், 'ஆப்ஷன்ஸ் டிரேடிங்' முறையில், 10ல் 9 பேர் நஷ்டத்தை சந்திப்பதாக தரவுகள் கூறுகின்றன. இதை கருத்தில் கொண்டு, சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள எச்சரிக்கையை போல, இனி 'ஆப்ஷன்ஸ் டிரேடிங்' செய்யும் போது, திரையில் '90 சதவீத முதலீட்டாளர்கள் நஷ்டமடைகிறார்கள்' என்ற எச்சரிக்கை செய்தி தோன்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us