ADDED : ஜூன் 04, 2026 03:09 AM

அ நிறம் | அளவு
முதலீட்டாளரின் புகார் பேரில், 'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஏ.எம்.சி.,' நிறுவனத்துக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஏ.எம்.சி., நிறுவனத்தின் ஏ.ஐ.எப்., பண்டு திட்டத்தில், முதலீடு செய்ய முதலீட்டாளரின் தகுதியை உரிய நேரத்துக்குள் சரிபார்க்காமல் தாமதம் செய்யப்படுவதாக செபி கண்டறிந்துள்ளது. இதுபற்றி அந்நிறுவனத்துக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து அந்த முதலீட்டாளரின் பணமும், கூடுதலாக இழப்பீட்டு தொகையும் சேர்த்து திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், நிறுவனத்தின் நிதிநிலைக்கும், செயல்பாடுக்கும் பாதிப்பில்லை என்று ஐ.சி.ஐ.சி.ஐ., தெரிவித்துள்ளது.
