ADDED : டிச 04, 2025 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச் சந்தைகளுக்கு வரும் குறைந்த ரிஸ்க் உள்ள அன்னிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில், செபி ஒற்றை சாளர முறையை அறிமுகப் படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள அரசு நிறுவனங்கள், மத்திய வங்கிகள், ஓய்வூதிய நிதிகள் போன்ற மிகப்பெரிய அன்னிய முதலீட்டாளர்களுக்கு, அவரவர் நாடுகளில் முதலீடு செய்ய கடுமையான சட்டங்கள் உள்ளன.
அதேபோல, அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தற்போது பல விதிகள் உள்ளன. இந்நிலையில், செபி அறிமுகம் செய்துள்ள ஸ்வாகத்-எப்.ஐ., என்ற திட்டம், அவர்கள் ஒரே இடத்தில் பதிவு செய்துவிட்டு, எளிதாக முதலீடு செய்ய வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

