sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ அதிகரிக்கும் 'ஷார்ட்' முன்பேர ஒப்பந்தங்கள்

 அதிகரிக்கும் 'ஷார்ட்' முன்பேர ஒப்பந்தங்கள்

 அதிகரிக்கும் 'ஷார்ட்' முன்பேர ஒப்பந்தங்கள்


ADDED : ஜூன் 03, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 01:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த மே 26ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரையிலான 4 நாட்களில் மட்டும், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 'எப் அண்டு ஓ.,' பிரிவில் கிட்டத்தட்ட 14,261 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றது, தேசிய பங்கு சந்தையின் புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

ஜூன் மாத முன்பேர வர்த்தகம் தொடங்கிய 3 நாட்களில் மட்டும் எப் அண்டு ஓ., பிரிவில் பங்குகள் கையில் இல்லாமல் விற்பனை செய்யும் முறையான 'ஷார்ட்' ஒப்பந்தத்தில் 70,315 லாட்டுகள் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களின் 'லாங் - ஷார்ட் விகிதம்' 3 மாத அடிமட்டமான 0.11 ஆக குறைந்துள்ளது. அதாவது, அவர்கள் வைத்துள்ள 10 வர்த்தக பொசிஷன்களில் 9 பொசிஷன்கள், 'சந்தை மேலும் சரியும்' என்ற கணிப்பிலேயே உள்ளன. ஆனால், இந்திய சிறு முதலீட்டாளர்கள் 'சந்தை மேலே ஏறும்' என்ற நம்பிக்கையில் அதிகளவில் பங்குகளை வாங்கி வருகின்றனர். இவர்களின் லாங் - ஷார்ட் விகிதம் 2 மாத உச்சமாக 2.96 ஆக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, பருவமழை நிச்சயமற்ற நிலை, நிறுவனங்களின் வருவாய் மீதான அழுத்தம் மற்றும் இந்தியாவின் அதிகப்படியான சந்தை மதிப்பு ஆகியவை தற்போதைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளன.

அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றத்தால் அடுத்த 3 மாதங்களுக்கு இந்திய சந்தை மந்தமான வளர்ச்சியையே பதிவு செய்யக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us