தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தைகளின் ஏற்ற இறக்கங்களிலும் வலுவாகவே உள்ள எஸ்.ஐ.பி., முதலீடு

 சந்தைகளின் ஏற்ற இறக்கங்களிலும் வலுவாகவே உள்ள எஸ்.ஐ.பி., முதலீடு

 சந்தைகளின் ஏற்ற இறக்கங்களிலும் வலுவாகவே உள்ள எஸ்.ஐ.பி., முதலீடு


UPDATED : ஜூன் 11, 2026 02:20 AM

ADDED : ஜூன் 11, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2026 02:20 AM ADDED : ஜூன் 11, 2026 02:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டின் பங்கு சந்தைகளில் ஏற்ற இறக்கங்கள் நீடித்தாலும், மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களின் எஸ்.ஐ.பி., முதலீடுகள் தொடர்ந்து வலுவாகவே இருப்பது 'ஆம்பி' வெளியிட்டுள்ள மே மாத தரவுகளில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், எஸ்.ஐ.பி., கணக்குகளை நிறுத்தும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.

முக்கிய அம்சங்கள்

* கடந்த மே மாதத்தில் 54.16 லட்சம் புதிய எஸ்.ஐ.பி.,க்கள் தொடங்கப்பட்டுள்ளன

* அதே மாதத்தில் 51.70 லட்சம் எஸ்.ஐ.பி.,க்கள் நிறுத்தப்பட்டன

* இதனால் முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி.,யை நிறுத்தும் விகிதம் 95.46 சதவீதமாக இருந்தது

* கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் எஸ்.ஐ.பி.,யை நிறுத்தும் விகிதம் 100 சதவீதத்தை தாண்டி இருந்தது.

சந்தை சரிவில் நிறுத்துவது ஏன் தவறு?

இதுதொடர்பாக, 'பண்ட்ஸ்இந்தியா' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சந்தை வீழ்ச்சியின்போது பல முதலீட்டாளர்கள், சந்தை சீரான பின், மீண்டும் முதலீடு செய்வோம் என்ற எண்ணத்தில் எஸ்.ஐ.பி.,யை நிறுத்துகின்றனர். ஆனால், சந்தை மீட்சி எப்போது தொடங்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது.
சந்தையின் சிறந்த சில நாட்களை தவறவிடுவது, நீண்டகால முதலீட்டு வருமானத்தை கணிசமான அளவு குறைக்கக்கூடும். கடந்த 1999 முதல் 2026 வரை 'நிப்டி 50 டி.ஆர்.ஐ.,' தரவை ஆய்வு செய்ததில்,
* 10 லட்சம் ரூபாய் முதலீட்டை தொடர்ந்து வைத்திருந்தால், அது கிட்டத்தட்ட 2.89 கோடி ரூபாயாக வளர்ந்திருக்கும்
* சிறந்த 5 வர்த்தக நாட்களை தவறவிட்டிருந்தால், இறுதி மதிப்பு 1.80 கோடி ரூபாயாக குறைந்திருக்கும்
* சிறந்த 10 நாட்களை தவறவிட்டால், அது 1.30 கோடி ரூபாயாக சரிந்திருக்கும்
* சிறந்த 15 நாட்களை இழந்திருந்தால், முதலீட்டு மதிப்பு வெறும் 97 லட்சம் ரூபாயாக மட்டுமே இருக்கும்.



சந்தை சரிவு தான் வாய்ப்பு
சந்தை சரிவின்போது, அதே எஸ்.ஐ.பி., தொகைக்கு அதிக யூனிட்டுகள் கிடைக்கும். பின்னர் சந்தை மீளும்போது, குறைந்த விலையில் வாங்கப்பட்ட இந்த கூடுதல் யூனிட்டுகள் நீண்டகால வருமானத்தை அதிகரிக்க உதவும்.



Image 1586524


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us