UPDATED : அக் 15, 2026 12:00 AM
ADDED : அக் 14, 2026 10:24 PM

ந டப்பு ஆண்டில், மதிப்பு அடிப்படையில் பெரிய ஐ.பி.ஓ., வெளியீடுகளை விட, சிறிய வெளியீடுகள் பட்டியலிடப்படும் நாளில் அதிக லாபத்தை கொடுத்துள்ளதாக ‘கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பட்டியலிடப்படும் நாளில் சிறிய ஐ.பி.ஓ., வெளியீடுகள் சராசரியாக 17 சதவீத வருமானமும், பெரிய வெளியீடுகள் 4 சதவீத வருமானமும் கொடுத்துள்ளன. அதாவது, பெரிய வெளியீடுகளை விட சிறிய வெளியீடுகளில் 4 மடங்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது.
ஐ.பி.ஓ., சந்தை மட்டுமல்லாமல், பங்கு சந்தையிலும் இதே போக்கு காணப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களில் லார்ஜ்கேப் பங்குகளை விட ஸ்மால்கேப் பங்குகள் அதிக வருமானம் கொடுத்துள்ளன. குறிப்பாக, கேபிட்டல் கூட்ஸ், பார்மா (சி.டி.எம்.ஓ.,), பாதுகாப்பு, மின்னணு உற்பத்தி சேவைகள் ஆகிய துறைகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாத வருமானம் (%)
நிப்டி 50 –5
நிப்டி மிட்கேப் 100 3
நிப்டி ஸ்மால்கேப் 100 16
ஆண்டு ஐ.பி.ஓ., வெளியீடுகள் திரட்டிய நிதி (ரூ.லட்சம் கோடி)
2024 91 1.80
2025 103 1.90
2026 96 1.14
(ஆதாரம்: கோட்டக்)
