உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 22, 2026 01:31 AM

அ நிறம் | அளவு
'சோலார் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், பங்குச்சந்தையில் டாப்--50 நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு, நேற்று பி.எஸ்.இ., வர்த்தகத்தில் 3 சதவீதம் உயர்ந்து, புதிய உச்சமான 18,690 ரூபாயை தொட்டு, 18,385 என்ற அளவில் நிலைகொண்டது.
கடந்த ஒரு மாதத்தில் பி.எஸ்.இ., சென்செக்ஸ் குறியீடு 5 சதவீதம் சரிவடைந்த நிலையிலும், இந்நிறுவன பங்கு மதிப்பு 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த மார்ச் 30, 2026 அன்று 12,036 ரூபாய் என்ற 3 மாத கால குறைந்தபட்ச விலையை தொட்ட இந்த பங்கு, அதன்பிறகு 55 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக, நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
